-->

paul

paul

வக்கத்தவ...






(குறிப்பு:கற்பனைகளால் பின்னப்பட்ட்து,கடைந்தெடுத்த என் தமிழுக்காக)
நான் நந்தா,.கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவள்  யாரென்று கூட எனக்கு தெரியவில்லை.ஆனால் அவள் எழுத்துக்களின் ஒவ்வொரு வரியிலும் என்னையே பார்த்தேன்.அவள் எழுத்துக்கள் ஒரு வித்தியாசமான அழகு...சற்று சோம்பேரித்தனம் நிறைந்த படிப்பு...மனதில் பட்டதை மட்டும் எழுதும் பதில்கள்.ஆனால் என்னுடைய தமிழ் அவளுடைய ஆங்கிலமாக தெரிந்தது.மற்றவர்கள் எதிர் பார்க்காத விடைகள்,மற்றவர்கள் எதிர்பார்புகளிடமிருந்து முற்றிலும் மாறுபாட்ட அலுத்தமான பதில்கள்.இவைகள் அனைதும் அவளுடைய விடைத்தாளில் நான் பார்த்தது.அவள் தெரிய வில்லை எனக்கு, அவளுடைய எழுத்துக்கள் மட்டும் தான் தெரிந்தது அந்த செமெஸ்டெரின் இறுதி வரை.ஆனாலும் சில தருணங்கள் அவளை உற்று பார்க்க வைத்தது அவற்றில் சில.
அன்றொருநாள் எனக்கு அவள் கேட்ட கேள்வியோ அல்லது அவள் சொன்ன வார்த்தயோ யாபகம் இல்லை.அவளை உற்று நோக்க வைத்தான் என்னை ஒருவன்.நான் வாய் விட்டுட்டயா? என்றேன்.அவள் உடனே தூ...தூ... என்றாள்.என்ன துப்புற... என்றேன்.அவள் எங்கள் ஊரில் எல்லம் இப்படித்தான் ஏதாவது அபசகுணமாக பேசிவிட்டால் இப்படித்தான் செய்வோம் என்று கூறி சிரித்தாள்.அப்பொழுது கூட என் மனதில் ஒன்றும் தோன்றவில்லை.பக்கத்தில் இருப்பவன்... ஏங்க! எப்படிங்க...என்றான்.அன்று திரும்ப திரும்ப அந்த நிமிடங்கள் என்மனதில்...அவ்வள்வு சந்தோசம் அவள் கண்களில் எனக்கும் தான்.
அவளுக்கு செமெஸ்டெர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகியது.அவள் கண்களை நான் படித்துவிட்டேன் நன்றாக.அவள் எழுத்துகளில் அவள் எண்ணங்களை எண்ணிப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.அவள் முகபாவனையில் முழுமனதையும் முழுமதியாய் வெளிச்சம் காட்ட கற்றுக்கொண்டு விட்டேன்.அன்று அவள் லேப்பிற்கு வன்தாள்,தேர்வு எழுத,அவளுக்கு வந்த ப்ரொக்ராம் ஈஸிதான்,ஆனாலும் அவளால் எல்லாவற்றையும் மனதில் நிறுத்த முடியவில்லை போல.அதற்கு காரணம் “அவள் மனம் மட்டும் தான்.என் பார்வயில் ஆசையே இல்லாத,அன்பை வெளிக்காட்ட முடியாத,உள்மனதில் அன்பிற்காக மட்டும் ஏங்கும் ஒரு இதயமாக மட்டும் தெரிந்தாள்.அப்படியே யாருன் அன்புகாடினால் அவளால் ஏற்றுகொள்ள முடியாது.”-அது ஈனக்கு மிகவும் பிடித்திருந்த்தது.டைம் ஆகிவிட்டது.. அவளுக்கு அவுட்புட் வரவில்லை அவள் அருகில் நான் சென்றேன்.அவள் கண்கள் தத்தளித்தது..அவளால் பேசமுடியவில்லை.. என்னால் முடியவில்லை என்று சொல்லும் போது அவள் நினத்திருப்பாள்...”என்னால் உங்களோட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியவில்லை என்று”அந்த நிமிடங்களில் என்மனதில் நின்றது.அவளிடம் நான் எதுவும் நான் பேசவில்லை...அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆசைத்தான்.அவள் அழுது விடுவாளோ? என்று எனக்குள்ளே ஒரு பயம்.அவள் அழுதாள் என்னால் தாங்க முடியாது.அவளைப்பார்க்கும் போது, எனக்குள்ளும் அழுகையே வந்துவிட்டது.அவள் மனம் நானாக இருப்பத்தால்...
அடுத்த செமெஸ்டெர் ஆரம்பம்...அவளிடம் பிடித்தது அவளுடைய கண்கள் பேசும்...உதடுகள் அசையும்... உள்ளங்கள் நினைக்கும்.அன்று அனைவரும் பென்ச் மாறி உட்கார்ந்தார்கள் புது கிளாசினுள் அவள் மட்டும் தனியாக என்னை பார்த்து முறைத்து கொண்டே இருந்தால்,நான் அவள் தோழிகளிடம் கூறினேன்,ஏன் இப்படி பண்றீங்க பவம் இல்லைய என்றவுடன்,அனை வரும் மாறி ஒரே பெஞ்சில் உட்கார்ந்தனர்.அவங்க மாறி உட்காந்தா? நான் என்ன பண்ண! என்ன முறைக்கிறா என்று வீட்டி; புலம்பினேன்.அவளுடைய மனதில் ஒரு எண்ணம் என் கண்களுக்கு தெரிந்தது அவள் கண்கள் மூலமாக..”நான்கு பேர் மத்தியில் அவளிடம் சப்த்தமாக பேசினால் பிடிக்காது...அவள் மனதில் இருப்பதை வெளிப்படயாக கேட்டாலும் பிடிக்காது” என்பது.இன்னொன்று “சார் நாம நல்லா படிக்க மாட்டோம் என்று நினைப்பாரோ” என்பது.செமெஸ்டெர் எஃஸாம் பேப்பர் திருத்தும் போது ஒரு கேள்விக்கு அவள் எழுதிய எழுத்துக்கள் என்னுள் யாபகம்.அவள் அந்த கேள்விக்கு விடை எழுதியிருப்பாள் என்று தோன்றியது.அவளுக்கு ப்ராக்டிகளில் நல்ல மார்க் வந்தது எனக்கு தெரியும்.ஆனால் அவளுக்கு முன் கூட்டியே சொல்வது தவறு.ஆகயால் அவளிடம் சென்று கேட்டேன் அந்த கேள்விக்கு பதில் எழுதினாயா? என்று... இல்லை என்றாள்.அப்பொழுது நான் சொன்னேன், “நான் உங்கூட பேசலேன்னு நினைக்காத உன்னை பற்றி கேர் பண்ணிக்கிருவேன்“என்று.அது அவளுக்கு புரிந்ததா? இல்லயா? என்று தெரியவில்லை.ஆனாலும் அவள் கூறினால் நான் நினைத்ததை,”நான் நல்லா படிக்க மாட்டேனு நினைக்காதீங்க”என்றாள்.நான் சிரித்துக்கொண்டே மனதில் நினைத்துக்கொண்டேன்.”ரிசல்ட் வந்தவுடன் நான் சொன்ன கேர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியுமென்று”அப்படியே பேசிய ஒரு வார்த்தை கூட ஓராயிரம் எழுத்துகளாக,கவிதைகளாக,ஓவியங்களாக என்னை தூங்கவிடாது என்பது மட்டும்எனக்கு நன்றாக தெரிந்த்தது.இருந்தாலும் அவளிடமிருந்து வரும் சில பேச்சுகளில் அன்புனம் அரவணைப்பும் தெரிந்தது...அது என்னை எங்கையோகொண்டு போய் செர்த்து விடும் என்பது மட்டும் என் இதயத்திற்கு நன்கு தெரியும்...நான் என்னை பற்றி யாரிடமும் சொல்லாத வார்த்தைகளை கூட அவளிடம் சொல்ல ஆசைப்பட்டேன்.உன்னோட ப்ரெண்ட் யாரென்று குறைந்தது மூன்று தடவயாவது கேட்டிருப்பேன்.அவள் ஒரு பெயர் சொல்லி விட்டாள்.இன்னொன்று சொல்லவில்லை.சற்று நேரம் கழித்து,கண்டிப்பா இன்னொரு ப்ரெண்ட் நேம் சொல்லனுமா? என்றாள்.நான் பேசவே இல்லை.என்னோட சிஸ்டரோட ப்ரெண்ட் என்றாள் சிரித்த படியே.அந்த சிரிப்பு பிடித்திருந்த்து.அவளிடம் எனக்கு பிடித்த ஒரே விசயம் அவள் எந்த ஒரு ஜென்ஸ் உடனும் பேசவில்லை.அப்படியே பேசும் போது அவள்...சொல்ல முடியவில்லை.
அன்றொரு நாள் எங்கண்களில் அன்பே இல்லாத அனாதை போல ஏக்கம்..காலையில் சாப்பிடவே இல்லை...பசி...அவளிடம் சென்று பேசினேன் “எனக்கொரு ப்ரொப்லெம் என்றால்,அதை யாரிடமும் சொல்ல மாட்டேன் நேரே என் அம்மாகிட்ட போய்...”ஏன் என்ன பெத்த என்பேன்”என்றேன்.என் மனதிற்குள் அவ்வளவு கஸ்டம்.அது வரை தலை குணிந்திருந்த அவள்,பின்புறம் திரும்பி சிரித்துக்கொண்டே நான் அப்படில்ல,”என்னோட ப்ரெண்ட் கிட்ட சொல்லிடுவேன்” என்றாள்.அந்த நிமிடங்கள் அவளிடம் சந்தோசம்.
அன்று ரிசல்ட் வெளியானது,அவள் மார்க் பார்த்திருப்பாள்...அவள் அருகில் சென்று “ நான் சொன்ன கேர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்ததா “என்று கேட்டேன் அவள் சொன்ன பதில் என்னை அழவே வைத்தது உள்ளாராக,”புரியுது சார் நீங்க நல்ல டீச்சர்னு”இதை சொல்லும் போது அவள் கண்களில் என்டவித சந்தோசமும் இல்லை.எந்த அன்பும் இல்லைஎனக்கு கஸ்டமாகி விட்டது.இனிமேல் பேசவே கூடாது...அவளுக்கு என்னை பிடிக்கவே இல்லை...என்னை வெறுக்கிறாள் என்ற ஒரு எண்ணம்.அப்பொழுது பல ரீசன் கள் சொல்லி என்னுடன் பேசாதே என்று சொல்லிவிடலாம்,எனக்கு போன் செய் என்று கூறினேன்.அவள் பேசிய போது அவள் வார்த்தயில் இருந்த கோபம் என் வாயையே அடைத்தது.போனை கட் செய்து விட்டேன்.
பேப்பரில் எழுதி அவளிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று அவளிடம் சென்று திரும்பி வந்து விடுவேன்.எனக்கு ஒன்று மட்டும் தெரிந்தது அவளுக்கு என்மேல் இருந்த அன்பு மட்டும் குறைந்தது என்று.
அவளிடம் அருகில் கூட செல்லவில்லை என் மூஞ்சியில் அடிச்ச மாதிரி,”உங்களைப் பத்தி நான்பேசவே மட்டேன்” என்று கூறிவிட்டால்.எதற்காக அப்படி கூறினால் என்று தெரிய வில்லை.என் மனதிற்குள் மட்டும் கோபம் இருந்தது.அதை என்னால் வெளியில் கொட்ட முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுதினேன்.என் மனது ஆறும் வரை.என் மனது ஆறும் வரை என்பாரம் குறைந்தது.பேப்பர் கிழிந்தது.”யாரும் என்மேல் அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை,திட்டாமல் இருந்தால் போதும்” என்று தோன்றியது.
அன்று ஹேப்பி நியூ இயர்க்கு முதல் நாள்.நான் மாலை வரை அவள் விஸ் பண்ணுவாளா என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவள் குனிந்த தலையை நிமிர்ந்தாள்...பேருந்து நகரும்போது என்பக்கம் திரும்பி சொன்னால் அவள் உதடு அசையும் படி,நான் திரும்பி சொல்வதற்கு முன் அவள் தலை குணிந்து விட்டாள்.அப்போழுது என் மனதிற்குள் அவ்வளவு சந்தொசம்,எப்படி சொல்ல.
என்னவோ தெரியவில்லை.அவள் கண்கள்கூட என்னை பார்பாதற்கு யோசிக்கின்றன.அன்றொரு நாள் அவள் சகோதரியின்  அசைமென்ட்டின் பின்புறம் அவள் வாங்கியிருந்த அதிகமான மார்க்குகளுக்கெல்லாம் என்னுடைய சப்ஜெக்டை முகவரியாக கொடுத்திருந்தாள்.அன்று தெரிந்தது அவள் என்மேல் கொண்ட உன்மயான அன்பு.அவளுடைய கேரக்டர் மட்டும் என் மனதில் பதிந்தது விட்டது அவள் முகமும் கூட...
அன்று அவள் தோழிகளுடன் பெஞ்சில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள்,அப்பொழுது அவள் பேலன்ஸ் மிஸ் ஆகியது எப்படியும் அவள் கீழே விழுந்து விடுவாள் என்பது எனக்கு நன்கு தெரியும்,ஆனாலும் எந்த ஒரு பொன்னயும் தொடுவதற்கு என் மனது உடன்பட வில்லை.அவளிடம் சென்று கூறினேன்.”நீ கீழே விழுந்து விடுவாய் என்பது எனக்கு நன் கு தெரியும்.ஆனாலும் ஒரு பொன்ன எப்படி தூக்க முடியும் ,பிடிக்க முடியும்”.அவள் சொன்னால் “ஐ நோ யூ”சார்னு.
நேற்று அவளிடம் சென்று எஃஸாம்ல யாருக்கும் பேப்பர காட்டினாயா என்றேன்.ஆமாம் என்றாள் கோபமாக.நான் கேட்டது எதற்காக? அவள் யாருடனும் பேசமாட்டாள் என்ற நம்பிக்கையில் மன்னை அள்ளி போட்டது மாதிரி இருந்தது.அதனால் தான் கேட்டேன்.(இந்த நிகழ்வுக்கு முன் இரண்டாவது தடவயாக அவளை போன் செய்ய சொல்லி சொன்னேன்.அவள் சந்தோசமாகதான் இருந்தால்,அவளிடம் “நீ பசங்க கூட பேசுவையா” என்ற ஒரு வார்த்தை கேட்க என்மனம் ஆசைபட்டது,ஆனாலும் இதனால் அவள் மனம் கஸ்டப்படும் என்பதனால் அவளிடம் நான் பேசாமல் கட் செய்து விட்டேன்.)அவளிடம் சற்று நேரம் கழித்து இது தப்பில்லையா என்றேன்.அவள் கோபமாக அவங்க காமிச்சாக! நானும் திருப்பி காமிச்சேன் என்றாள்.நான் இதனை உன் கிட்டே எதிர் பார்க்கவில்லை என்றேன்.ஆனால் அவளுடைய ஹால்க்கே எஃஸாம் டியூட்டி வந்தது,அவள் நினத்திருப்பாள் இவன் வேண்டுமென்றே வந்திருக்கிறான் என்று.கடவுளுக்கு தெரியும் என்னைப்பற்றி...அவள் கண்களில் தெரிகிறது அவள் செய்கின்ற ஒவ்வொன்றும்.இன்று அவள் எழுத்துகளில் ஈர்ப்பு இல்லை.என்மேல் அவளுக்கு நிறைய கோபம்.ஆனால் நான் நினைத்தது,”அவள் என்னப்பற்றி என்னவெல்லாம் நினைத்திருப்பாலோ?அவள் விருப்பத்திற்கு விரும்பாதவனாய் இருக்க விரும்பவில்லை.அவளுக்கு என்னை பிடிக்க வில்லை என்றாலும் என்னுடைய சப்ஜெக்டாவது பிடிக்கட்டும் என்று,அவளுடன் பேசாமல் இருக்கிறேன்”.இப்பொழுது நான் அவளைப்புரிய வில்லையா! இல்லை அவள் என்னைபுரியவில்லையா என்று தெரியவில்லை.நான் அவளிடம் சென்று,” என்மேல் இருக்கிற  கோபத்தை என் சப்ஜெக்ட்ல காமிக்காத என்றேன்”.அவளுக்கு புரியவில்லை.
நான் அவளிடம் இறுதியாக நேற்று ஒன்று சொல்ல வேண்டும் என்று அவளிடம் சென்றேன்,”என்னை தொல்ல பண்ணாதீங்க,நான் காமிச்சது தப்பில்ல, நான் பேசமாட்டேன் “என்று தலைவைத்து டேபிள் மீது படுத்து விட்டாள்.ஆனால் அவளிடம் சொல்ல நினைத்தது,” போன செமெஸ்டெர் நீ பேசுனப்ப எனக்கு தோனல...ஆனால் இப்ப நான் பேச விரும்பிறேன்! ஆனால் நீ என்ன வெறுக்கிற!!”
ஒரு நாள் அவள் தங்கை,சார் உங்ககிட்ட ஒன்று சொல்ல வேண்டுமென்றால்,எங்க அக்காவோட 200 ருபிஸ் காணல,அன்னைக்கு திடிர்னு பஸ்ல ஏறிட்டு, பர்ஸ்ல பார்த்தா, பணமே கானோம்.இதற்கு நானும் ஒரு காரணம் தான், அவள் 200 ருபிஸ் வைத்திருப்பதாய் நான் தான் வெளிப்படயாக கூறினேன்,அதை தெரிந்து கொண்டு எவனோ எடுத்துவிட்டான் போல.உடனே அவளோட சிஸ்டெர்கிட்ட 200 ருபிஸ் கொடுத்து விட்டேன்.அதனை அவள் விரும்ப மாட்டாள் என்று தெரியும்.மறுநாள் அவள் வந்தால் கோபமாக,”எனக்கு பணம் வேண்டாம்” என்றாள்.அப்படியென்றால் கொடுத்து விடுங்கள் என்றேன்.நான் எதுவும் எதிர்த்தே பேசவில்லை.அவள் மனம் சற்று தடுமாறியது என்ன பேசுவதென்று,எனக்கு தெரியும் அவள் மனது என்னவென்று?.
சிலநாள் சிரித்துக்கொண்டே கேட்டேன்,”நான் ஒரு திருட்டுப்பயே, நான் தான் 200 ருபிஸ் எடுத்தேன் என்றால்,என்ன பண்ணிருப்ப என்று? அவள் சொன்னால் கம்ஃப்ளெய்ன்ட் பண்ணிருப்பேன்! கம்ஃப்ளெய்ன்ட் பண்ணிருப்பேன்!! என்று இரண்டு தடவை சொன்னால் சிரித்துக்கொண்டே.அவளுக்கு அடுத்த செமெஸ்டெர் வந்தது.எனக்கு தெரியும் அவளுக்கு எந்த ப்ரொக்ராம்லா ஈசிஎன்று,ஆனாலும் அவள் எல்லாவற்றையும் படித்திருப்பாள் என்று எனக்கு நங்கு தெரியும்.அன்றும் அவள் அருகில் இருந்த பொன்னுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்துதான் இருந்தால்,என்னுடைய என்னமெல்லாம் அவள் நிறைய மதிப்பெண்கள் வங்க வேண்டும் என்பதில்தான் இருந்தது.அவளிடம் சென்று,”மத்தவங்கள காப்பாத்துறதுக்கு நாங்க இருக்கிறோம் ,முதல்ல உன்ன காப்பாற்று “என்றேன் அவள் முகத்தில் மட்டும் தான் புன்னகை.அன்று பிரின்சிபால் பிறந்தநாள் அவளுக்கு தமிழே தெரியாது! இருந்த பொழுதிலும் அவளுக்கு ஒரு கவிதை எழுதிக்கொடுத்தேன்,பிரின்சிபாலிடம் சொல்வதற்காக.அவள் எனக்காக ட்ரை பண்ணி படித்தாள்,அவள் படித்தது வித்தியாசமான அழகு “அனங்கள் நட பயின்றிருக்கா மெகங்கள் தவழ்ந்திருக்கா,வானயர்ந்த மூங்கில் கடுகளில் இளந்த்தென்றல் இசந்த்திருக்கா”என்று.அன்று முழுவதும் அவள் வாசித்தது என் காதுகளையே இனித்தது.(தொடரும்)



பிரின்சிபால் பிறந்த நாளன்று ,நான் எழுதிய கவிதையை சொல்லுவதற்காக காத்திருந்தோம்,அப்பொழுது ஒவொருவரும் எனக்கு இந்த கலர் ரோஸ் வேனுமென்று சொல்லிக்கொண்டிருந்தனர்.அவள் எனக்கு ஒயிட் ரோஸ் வேண்டுமென்றால்,அப்பொழுது எனக்கு யாபகம் வந்தது,போன தடவை இதே பிறந்தநாளின் பொழுது,அவள் ஒயிட் ரோஸ் இருக்கு சார்! என்ற உடன் நான் ஆச்சர்யமாக கேட்டேன் “ஒயிட் ரோஸ் இருக்கா!” அது அவள் மனதில் இருந்திருக்கும் போல.
ஈவ்னிங் நேரமாகி விட்டதால் அவள் கண்களில் ஏதோ,ஏமாற்றம் தெரிய கிளம்பி சென்று விட்டால்.அவள் வாங்கிவந்த ஒரு ரோஸ்கூட வாட வில்லை,அவள் மனம் போல,போன தடவை ரோஸ் வாடிவிட்டது என்று நான் வருத்தப்பட்டது என் எண்ணங்களில் இடறியது.
இதற்கு முன்பாக அவள் பிறந்த நாள் போல..அது எனக்கு தெரியவில்லை.ஆனால் அவள் எனக்காக சாக்லேட் வாங்கி வைத்திருப்பால் போல பேக்கில்.அது அவள் ப்ரெண்ட் சொல்லிதான் எனக்கு தெரியும்.அப்படி சொன்ன உடன் நான் எப்படி சும்மா இருக்க முடியும்.அதனால் கிஃப்ட் வாங்கி கொடுத்து விட்டு,வாங்கி கொள்ளலாம் என்று,புன்னகையுடன் இருந்த அவளிடம் வேண்டாம் என்றேன்.அவள் முகமே மாறிவிட்டது. கோபமாக கூறினாள் “நான் வெளில தூக்கி போட்டுருவேன்” என்று அவள் தோழியிடம்,சாக்லேட்டயும் அவள் தோழியிடமே கொடுத்து விட்டால்...நானும் வாங்கிகொண்டேன்.அதை நான் அப்படியே பத்திரமாக வைத்திருந்தேன்.ஆனால் கடந்த ஒரு டெய்லி ஃபிரிட்ஜில் வைத்து வைத்து எடுத்து வந்தேன் என்று கூறினாள்.
நான் சாயங்காலம் வீட்டில் வைத்திருந்த 5000 ரூபாயை எடுத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தேன்,என் தமிழ் கற்பித்தது,சங்கு கழுத்துக்கு செயின் தான் அழகு என்று,ஆனால் என் விரல்களில் விளைந்ததோ ரிங்க்குக்காக தான்.ரிங்க் வாங்குவதற்காக ப்ரெண்டோட பைக்கில் டி.நகர் சென்றேன்,அவளுடைய விரல்களை எவ்வளவோ ஞாபக படுத்தி பார்த்தேன்,ஞாபகம் வரவில்லை,ஏனென்றால் அவள் முகத்தை தவிற அவளிடம் எனக்கு எதுவும் தெரியாது,தெருவில் இருக்கிற விரல்களை எல்லாம் அலசிப்பார்தேன்,அதில் எனக்கு உடன்பாடு இல்லை கடைசியில் ஒரு வழியாக,என் சுண்டுவிரல் அளவிற்கு மோதிரம் வாங்கினேன்.
மறுநாள் எங்கிஃப்டை வாங்கிக்க சொன்னேன்,நான் சும்மாதா கேட்டேன் என்றாள்,நான் கூறினேன் ஸ்மால் கிஃப்ட் தான்.பாரு உனக்கு பிடித்திருந்தா வங்கிக்க,முதல பாரு! ஓ.கே வா! என்றேன்.அவள் தலையை ஆட்டிக்கொண்டே வங்கிச்சென்றாள்.வாங்கி சென்றவள் திரும்பி வந்து,சார் இவ்வளவு பெரிய கிஃப்டா,வெளில பாக்கத்தா சின்னது,ஆனால் உள்ள இருக்கிற கிஃப்ட் பெரிசு சார்,என்று திருப்பி கொடுத்து விட்டாள்,நான் சாக்லேட்டயும் திருப்பி கொடுத்து விட்டேன்.அவள் மனம் கஸ்டப்படும் என்பது எனக்கு தெரியும்,ஆனாலும் என்மனம் இடம் கொடுக்க வில்லை அதை வாங்குவதற்கு.அவளுக்கு எல்லா விசயத்தயும் அவள் அப்பாவிடம் சொல்லும் பழக்கம் உள்ளது.அவளிடம் கோபமா என்று கேட்டேன்,நான் என் டாடி கிட்ட சொன்னே அவரு சொன்னாரு சார் ஏன் அப்படி பண்ணாரு என்று,எனக்கு உள்ளாராக பயம் இரண்டு நாட்களாக வீட்டில் சென்று புலம்பி விட்டேன்.மூன்றாவது நாள்,”உண்மையிலே உங்க டாடிகிட்ட சொல்லிட்டயா என்றேன்”.இல்ல சார் சும்மா சும்மா சொன்னே சர்.பயப்படாதீங்க.அப்பதான் எனக்கு மன நிம்மதியே வந்தது.அதற்கப்பறம் அவள் தோழிகள் என்னிடம் வினவினார்கள் “நீங்க லவ் பண்றீனகளா” என்று,நான் சொன்னேன் ”அப்படில்ல,பிடிக்கும் தட்ஸ் ஆல்” என்றேன்.இன்னும் நிறய கேள்விகள்,என்மனதில் எழுந்த ஒரே பதில் “அவள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையின் அளவு,நான் என்ன செய்தாலும்,அவள் அதை திருப்பி செய்வாள் என்ற நம்பிக்கை”.
சரி அவள் பிறந்தநாளுக்கு ஒரு கிஃப்ட் கூட கொடுக்க வில்லையே என்ற வருத்தம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது...இருந்தாலும் அவள் என்னுடன் பேசிய தருணங்கள் 14ஐ யாபக படுத்தினேன்.அதனயே தான் பெரிய கிஃப்ட் ஆக நினைத்தேன் மெஸேஜ் ஆக போனில் அதற்கு அவள் தந்த பரிசு எப்படியிருந்தது தெரியுமா? இதோ Ah s nice        date:1/08/10    time1:05:19.                              எங்க என்று பாக்குறீங்களா?என் மொபைல தாங்க.
அவ்ள் கூறிய முதல் ப்ரென்ட் பானுதா,நான் சொல்வேன், நான் உன் ப்ரென்ட் இல்லையா? என்று.இருந்தாலும் அவளதா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளவிடா யாரும் எனக்கு ப்ரெண்டா இருக்க முடியாது,நீங்க சார் அவ்வளவுதான் என்றாள்.நான் சொன்னேன் பாரு ஒருநாள் சொல்வ நீங்க என் ப்ரென்ட் தானு.பாக்கலாம் என்றாள்.சரி உன் ப்ரென்டோட ஃபோட்டோ காமி என்றேன்.மறுனாள் காலையில் வந்து என்னிடம் நீட்டினால்...டிப்பார்ட்மென்ட் ஆக இருப்பதால் ஒரு தடவை பார்த்து விட்டு,நாளைக்கு கொடுக்கவா என்றேன்.(அதில் மொத்தம் 3 பேரோட போட்டோ இருந்தது.ஒன்னு பானு,ரெண்டு அவளோட பத்தாவது கிளாஸ்மேட் ஒரு பையன்,அவளோட திக் ப்ரென்ட் போல.மூன்றாவது அவளோட சாரி கட்டுன போட்டோ.வித்தியாசமா அழகா இருந்தது. எனக்கே புரியல! நாம கேட்டது அவ ப்ரென்ட் ஃபோட்டோதா? அவ எல்லா ஃபோட்டோவயும் காமிக்கிறாலே என்று.).நாளைக்கு கொடுக்கவா? என்று கேட்டேன்.நோ சார்.இன்னைக்கே கொடுங்க சார் என்றாள்,சரி என்று திருப்பி கொடுத்துவிட்டேன்.சற்று நேரம் கழித்து சென்றவள் திரும்பி வந்தாள் தோழி,நீங்க பார்த்துட்டே கொடுங்க என்றால்,வேண்டாம் என்றால் அதுக்கும் முறைப்பாள் என்று,வாங்கி வைத்து கொண்டேன்.வீட்டில் வைத்து இரண்டு தடவைதான் பார்த்தேன்.ஏன் என்று தெரியவில்லை.மறுனாள் அவள் அருகில் சென்ற பொழுது,போட்டோஎனக்கு வேண்டுமென்றால்,நான் எனக்கு ஒரு போட்டோ எடுத்துகிறவா என்றேன்.நோ சார் என்றவள்,ஃபோட்டொ வாங்கியவுடன் தான் திருப்பி சென்றாள்.அப்பொழுது அவள் சொன்னாள்,”அப்படியே ட்ரா பண்ணி கொடுத்திராதீங்க “ என்று.அந்த ஐடியா கூட எனக்கு பிடிச்சிருந்த்தது.
அவளைப்பற்றி எழுதிய இந்த நோட்டை அவளிடம் காமிக்க வேண்டும் என்று ஆசைதான்...ஆனால் அவளுக்கு தமிழ் அவ்வளாவாக தெரியாது.அதனால் அவள்  தோழியிடம் கொடுத்து படித்து பார்க்க சொன்னேன்.அவள் படித்துக்காமித்தாள்..அதனால் என்ன ஆனது என்று ஆச்சர்யமாக கேட்கிறீர்களா...அத சஸ்பன்ஸ் ஆக வைத்துகொள்வோமா?இருந்த்தாலும் ஆசையா இருக்குதா..தெரிந்து கொள்வதற்கு,”இந்த நோட் ஜெராக்ஸ் கேட்டால் என்னிடம்...எப்படியிருக்கிறது உங்களுக்கு...அது மாதிரிதான் எனக்கும்...”அவளுக்காக அள்ளும் பகளும் உட்கார்ந்து எழுதி ட்ரா பண்ணி எடுத்து நீட்டினேன்”.அவள் சொன்னாள் உங்களுக்கு நிறய ப்ரீ டிமெ இருக்கு.அப்ப என்மனசுல பட்டது,நம்மள வெட்டிப்பயனு சொல்றா போல.அவள் கையில் நோட் சென்ற பின், உனக்கு எனக்கு என்ன பிடித்திருக்கிறது என்றேன்,”டையக்ராம்லா பிடிச்சிருக்கு” என்றாள்.என்னவோ அவள் சொன்ன பதில் எனக்கு பிடிக்கவில்லை,என் எழுத்து பிடிக்கல,என் மனசு பிடிக்கல,  டையக்ராம் பிடிச்சிருக்கிறதா? என் மனதிற்குள் இருந்த கோபத்தில் எல்லாவற்றையும் கிழித்து எறிந்து விட்டேன்.அப்புறம் என் மனசுல தோணுச்சு ஒரு வேள தமிழ் புரியாததால இப்படியோ!என்று.இருந்த்தாலும் என்மனசு அவள் சொன்னது ஏத்துக்கிறல.
கொஞ்ச நாள் கழித்து,மறுபடியும் ஆங்கில புத்தாண்டு பிறந்த்தது,அப்பொழுது அவள் பஸ்ஸில் கூறிய கடந்த வருடம் யாபகம் வந்தது,நாம் எப்படியாவது அவளுக்கு பிடிச்ச மாதிரி விஸ் பண்ண வேண்டும் என்று வீட்டிற்கு சென்று யோசித்தேன்,எனக்கு இவளைப்பற்றிய ஞாபகத்தைவிட என் கல்லூரியின் மூன்று மாத தோழி சந்தியா ஞாபகம் தான் வந்தது,அவகிட்ட நான் நினைசத பேச போவேன் ,ஆனால் எனக்கு முன்னால அவள் பேசுவா அப்படியே நான் பேச வந்தத மறந்திருவே! அத வைச்சு எழுதினேன்.
உன் முகம் வாடியபொழுது
உரையாட ஆசைகொண்டு
உன் அருகில்-நான்
நாணி நின்றேன்
கண்பார்த்தேன்
கவலைநீக்க...

ஆசையாய் பேச
ஆவலுடன்...
பேசுகிறாய்
பேதயாய்...
பிடித்த
மனதாய்
மறந்து
மருகி நின்றேன்
கண்ணசைத்து பேசுவாய்
வாய் மௌனமாய்
முகம் பாவனயாய்
பாவை என்பதாலோ!

என்மனம் நினைத்ததை
எடுத்துரைக்கவும் இல்லை
எழுதிக்க்கொடுக்கவும் இல்லை
எதுவும் பேசாமல்
நகைத்து
நான் ஆகினாய்
நீ
இன்றொரு நாள்
நான்
நண்பன்
நீ ஆக
நான் கு வார்த்தை கொண்டு
“என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”

இப்படி ஆசையா நாம எழுதினாலும்,ஒரு ப்ராப்ளம் இருக்கு,அவளுக்கு தமிழ் புரியாதுல,ஆனால் நான் அலெர்ட் ஆயிட்டேன்.இத அவளோட மொழிக்கு டிரான்ஸ்லேட் பண்ணி கொடுத்திட்டே.என்ன கூப்பிட்டு சொன்னா “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.இன்னொன்னும் சொன்னால் இப்ப சொல்றேன்” நீங்களும் என் ப்ரெண்ட்தா” என்று புன்னகையுடன்.எனக்கும்தா.
அப்படியே நாட்கள் நகர்ந்தது,அவள் இன்னும் 3 மாசத்துல காலேஜ் விட்டு போயிருவா,சரி அவகிட்ட போன் நம்பர் கேட்டேன்,நான் தருவேன் சொன்னா எனக்கு தோன்றப்ப எனக்கு வருத்தமே இல்ல,அப்பகூட அவ கேரக்டர்தா எனக்கு பிடிச்சது.ஆனால் இப்பலாம் என்ன தவிற எல்லரயும் கண்டுக்கிறா,அதனால் தான் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது க்ண்டுக்கிறலாம்லனு ஒரு ஐடியா பண்ணி டெய்லி ஒரு ரூபாய் கொடு நீ இன்ன கொஞ்ச நாள்ல காலேஜ் விட்டு போய்ருவேள என்றேன் அவள் சொன்னால் முதல் நாள் “வேண்டாம் எதுக்கு”.இரண்டாவது “எனக்கு பிடிக்க வில்லை இது”.என்றாள்.மூன்றாவது நாள் “கொடுக்க மாட்டேன் என்றாள்”.ஏன் என்று கேட்டேன்,அதற்கு கூறினாள் “நான் ஒரு பையனா இருந்தா பண்ணிருப்பேன்”.இந்த பதில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
அப்படியே அவள் காலேஜ் விட்டு வெளியே சென்று விட்டால்,மறுவருடம் அவள் பிறந்தநள்ப்ப வந்தால் அப்பொழுது என் கையில் ஒரு பேப்பரில் இருந்தது,அவள் சொன்ன வெட்டிப்பையன வச்சு நான் எழுதிய கவிதை,நான் கொடுக்கலாமா வேணாம என்று யோசித்து விஸ் பண்ணினேன் “ஹேப்பி பெர்த் டே டு யூ” என்று.பரவாலயே ஞாபகம் வச்சிருக்கிங்களே என்று அவள் சென்று விட்டாள்.என் பேப்பரில்...
விடியலில் பூத்த
வெள்ளிமலரிடம்
வெனாவாக பேச
வெட்கப்பட்டு
வினவி நிற்பான்
வெறும் கையுடன்
“வெட்டிப்பையன்”
வெறும் பையை
வெரிக்க்ப்பார்த்தான்
வெள்ளைக்காகிதம்
எதுவுமில்லாமல்
எழுதினான்
எழுத்துக்களால்
இரண்டு மட்டும்
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று.
மறு வருசம் சில நாட்களில்,அவளைப்பற்றி அவளோட தோழிகள் கூறினார்கள்,அவங்க அம்மவுக்கு உடம்புக்கு முடில, எல்லா ஒர்க்கயும் அவதா பார்த்துக்கிறா.அவளோட கஸ்டத்த யார்கிட்டயும் சொல்லமாட்டாள், அது அவளுக்கு பிடிக்காது. எனக்கு கோபம் தா எவ்வளவு பழகியும் நமகிட்ட எதுவும் சொல்லலே.போறானு விட்டுட்டே.இருந்தாலும் அவ பிறந்தநாள் வந்தப்ப,அவங்க அப்பவ அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவங்க அப்ப எழுதுற மாதிரி எழுதினேன்,அப்பறம் அவ ப்ரெண்ட் எழுதுற மாதிரி, எழுதினேன்.இந்த ரெண்டு,போன வருசத்து வெட்டிப்பையன் 3ஐயும் சேர்த்து கொடுத்தேன்,நீ ஏன் அவர்ட்ட வங்குறேனு? அவ ஃப்ரெண்ட திட்டிட்டு வாங்கி வச்சுகிட்டாலாம்.அதாங்க அவகிட்ட போய் எதுவும் கேட்கவும் முடியாம,பேசாவும் முடியாம,அவளுக்கு பிடிச்ச மாதிரி பேசாம இருக்கேன்.
அவங்க அப்பா
மான் விழியாய்
மகளவள் பாதத்தில்
தடம் பதித்து
நடை பயின்றேன்...

குங்குமப்பூவாய்
செவ்விதழ் மூடிய
செறுவாயில்
பட்டுதமிழ்
பயின்றிருக்கிறேன்

செம்பூவின்
வாசத்தில்
வம்பிழுத்து
வசைபாடிய
வார்த்தைகளில்
வாஞ்சைகூட
வற்றவில்லை

பால் மனம் மாறாத
பவள சிரிப்பில்
இதழோரம் வடிந்த
நீர்த்துளிகளில்
இனிப்புகூட
இதயத்தில்
அகலவில்லை
ஆகிவிட்டதாம்
அகவை
என் குழந்தைக்கு
ஆதலால்
“என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”

அவள் தோழி

வெக்கங்கெட்டவளாய்

வீதியில் சிரித்து

வீட்டிற்கு சென்று

எழுதினேன்

ஏகப்பட்டப்பிழை

அடித்து

திட்டினேன்

திருந்தவில்லை

வரி

அகப்படவில்லை

வார்த்தை

அவ்வளவு பஞ்சம்

அறிவுக்கு

ஆனாலும்

அன்புத்தோழிக்கு

“அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

இப்ப புரியுதா எப்படி வக்கத்து போயிருக்கேனு,மிக்க நன்றி படிச்சவங்களுக்கு.கதைக்கு கொஞ்சம் கமெண்ட் கொடுங்க,நமக்கு இதெல்லாம் புதுசா பாஸ்.