-->

paul

paul

பிறந்த நாள் கவிதைகள்






1)
இளையவன்
எண்ணத்தில்...
ஏதேதோ...
ஏந்தினான்...
கடவுளிடம்
விழுந்தது
பிச்சையோ..!
படியளந்தது
பருக்கையோ..!!
பரம்பொருளின்
கருணையோ..!!!
தொட்டுக்கோ
தொடச்சுக்கோ-என்று
பசியாற்றினாள்
பாவை
தமிழன்னை
பருகிய
தமிழின்
பண்சுவைபாட
இதோ
எங்கள்
“தமிழ்ப்பாவை”


2)
கச்சிதமான
வார்த்தைகொண்டு
கடைந்தெடுத்த
தமிழெடுத்திருக்கிறான்-இந்த
கள்ளுழிமங்கன்
கனாகண்டானோ?
கர்வமா பேசுறா!
கருவாப்பயே
ஒருவேள
பாசமா பேசுறாளோ
பக்கி!
இவங்களுக்குள்ள
இத்தனையா?
ஏளனம்
எடுவட்டமக்கா
என்னமோப்பா...
இன்னைக்கு
இவங்க கண்ணுளயும்
தமிழ் தத்தளிக்குது
இப்படி
“பிறந்த நாள் வாழ்த்துக்கூற”


3)
இமைகளில்
எழுந்த
என் கனவை
எண்ணங்க்களில்
சேர்த்த பொழுது
எழுத்து பிழையை
எண்ணியது
என் கண்கள்...

வரிகளை
வாசித்தபொழுது
சிரித்தது
என்வாய்

எழுதிமுடித்தபொழுது
இடறியது
என்மனம்

இலக்கணம் தேடி
இருந்த பொழுதிலும்
என் அன்புத்தோழிக்கு
“என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


4)
வெக்கங்கெட்டவளாய்
வீதியில் சிரித்து
வீட்டிற்கு சென்று
எழுதினேன்
ஏகப்பட்டப்பிழை
அடித்து
திட்டினேன்
திருந்தவில்லை
வரி
அகப்படவில்லை
வார்த்தை
அவ்வளவு பஞ்சம்
அறிவுக்கு
ஆனாலும்
அன்புத்தோழிக்கு
“அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


5)
வீதியெங்கும் தோரணமாய்
விழிவைத்தோம்
வெண்சாமரமாய்
இதழ்விரித்தோம்
இனிப்புக்கு கரும்பாய்
கவிஎடுத்தோம்
தலவாழையிலையில் 16 வகைகூட்டுகளாய்
பல்வரிசை சமைத்தோம்
மார்கழி பெண்களாய்
வணங்கி
வரவேற்கிறோம்-இந்த
“தைமகளை”


6)
முந்தானைல முடிஞ்ச
முக்காத்துட்டு காசு
சுருக்குப்பையில போட்டு
சுருவாடு காசா
சேர்ந்திருந்தது
சில்லரையாக...
இன்னைக்கி
சிறப்பு கூடினோம்
செந்நிற நோட்டுகளாக
மதிப்பு மாறினோம்
ஆதலால்
மாசற்ற மாண்புடன்
மமதையில் மிதப்புடன்
கூறுகிறொம்
“மென்மையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


7)
அரும்புகளின்
மடல்களாய்
ஆதவனின்
ஒளியாய்
உளியின்
உருவங்களாய்
உங்களை
தேடிவந்தோம்
உரத்தகுரலில்
பேச அல்ல
உண்மைக்குரலில்
உறவாட
உங்களுக்கென்று
ஒருநாள் அமைத்து
அணையாத தீபங்களாக
ஒளிஉமிழ் கண்கள் கொண்டு
“பிறந்த நாள் வாழ்த்துக்கூற”


8)
முகவரி தெரியாத
முற்றத்தில்
முட்டிவலிக்கிறது-என்று
இளைப்பாறிய பொழுது
இளையவள்
என்ன உறவு ?
தண்ணீர் கொடுத்தாள்
தாகம் தீர்க்க
நிறம் பார்க்கவில்லை
நிம்மதியாய் சாய்ந்தபொழுது
நினைவுகளில்
நின்றவளின் கண்களில்
பாசத்தின் பரிமாணம்.
எவனோ! என்னவோ!
எழுதவில்லை
என் எழுத்துக்களிலும்
ஈரம் உண்டு
தாகம் தீர்க்காவிட்டாலும்
தங்க இடம் கொடுக்கும்
இவளும் என்பிள்ளைதான்-என்று
எனக்கு தெரியவில்லை
என்ன நிறம்
எழுத்துக்களுக்கு
என்ன வடிவம்
பாசத்திற்கு
பரிமாணம்-இது
என்னுடையது
எதுவும் எதிர்பார்க்கவில்லை
பற்றுதலை பகிர விரும்புகிறேன்
“பாசமிகு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி”


9)
வானத்து நிலவு
வாட்டமாய்
வழுவிழந்த பொழுது
விழுமி நின்றோம்
விண்மீங்களாய்...

விம்மிய எண்ணத்துடன்
வீற்றிருந்த பொழுது
வெண்மேகங்கள்
விலகிச்சென்றாலும்
வெண்புறாக்கள்
வேடிக்கை காட்டினாலும்

காணவில்லை
புன்னகை

பூத்தது
பூவிதழ் திறந்த
கருவிழி நிறைய
பூரிப்பு
பூமலர் தாங்கி
பொன்நிலவை
வரவேற்று
“பிறந்த நாள் வாழ்த்து”
கூறிய பொழுது


10)
வானத்து மேகத்தில்
களைத்து போன
எண்ணங்களை

தூத்தியசாரலில்
தேகத்து குளிராய்
தேக்கினேன்

தேங்கியநீர்
தெளிந்த முகம் காட்டியது
கண்ணில் பட்டது
உங்கள் முகம்
உரையாட ஆசை கொண்டு
உற்றுநோக்கினேன்
வெம்மினேன் 
வெண்பாக்கள்
சிரிப்பாய்...

வெகுளியாய்
விறுநடை கொண்டு
வீராப்புடன் கூறுகிறேன்
“விருப்பமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


11)
நினைவுகளில்
நீ பேசிய
வார்த்தைகள்
உரசும் பொழுது
உதடு சிரித்தது

கண்ணிமை திறந்தபொழுது
காணவில்லை
கவிதையை...

எண்ணங்களை 
புரட்டியபொழுது
இன்று
ஏதோ
சொல்ல மறக்கிறேன்
என்று
“என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


12)
மான் விழியாய்
மகளவள்
பாதத்தில்
தடம் பதித்து
நடைபயின்றேன்

குங்குமப்பூவாய்
செவ்விதழ் மூடிய
செறு வாயில்
பட்டுத்தமிழ்
பயின்றிருக்கிறேன்

செம்பூவின்
வாசத்தில்
வம்பிழுத்து
வசைபாடிய
வார்த்தைகளில்
வாஞ்சைகூட
வற்றவில்லை

பால்மனம் மாறாத
பவளசிரிப்பில்
இதழோரம் வடிந்த
நீர்த்துளிகளில்
இனிப்புகூட இதயத்தில்
அகலவில்லை
ஆகிவிட்டதாம்
அகவை
ஆதலால்
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்