-->

paul

paul

நிழல் மோதும் கரையொரம்...

நிழல் மோதும்
கரையொரம்...

நிற்கதியாய்
நின்றவனுக்கு

அலை பேசும்
வார்த்தைகூட
அன்பாய்
தெரியும்...

விரும்பிய
கடவுளை நினைத்து
வெறும் கல் முன்
நின்றால் கூட
ஆயிரம் பாவனை
காட்டும்...

காத்திருந்த
கேள்விகளுக்கு
பதில் கூட
பாசாங்கு
பன்னும்..

சேர்த்திருந்த
உண்டியலில்
செல்லாக்காசுகூட
போட்டி போடும்
வெளிவருவருதற்கு...

ஆம்..
இந்த
செல்லாக்காசு...
பாசாங்கு பண்ணி...
ஆயிரம் பாவனைகாட்டி
அன்பாய் கூறுகிறது

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்”