மதுரை மாவட்டம் மேலத்திருமாணிக்கத்தில் உள்ள கோவில் ஸ்ரீ ஆதி மூர்த்தி சுவாமி கோயிலாகும்.இத் தலத்தின் வரலாறு பின் வருமாறு,
பல்வேறு வருடங்களுக்கு முன்பு இங்கு ஆதி மூர்த்தி அய்யர்,அவரது மனைவி மற்றும் அவரது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.எப்படி மதுரை மீனாட்சியம்மன் கோயிலோ! அது போலவே இங்கும் மீனாட்சியம்மன்-சொக்கர் கோவில் அமைந்துள்ளது.ஏன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலே இந்த கோவிலின் கட்டமைப்பை பின் பற்றியதுதான் என்று கூறுகிறார்கள்.இங்கு ஒரு குளம் கூட உள்ளது.இந்த கோவிலில் ஒரு பெரிய நாகராஜனும் வாழ்ந்து வந்தது.இந்த கோவிலில் பூஜை செய்து,மீனாட்சி-சொக்கரை வணங்கி வந்தார்.அவரது மனைவியும் பூஜைக்கு துணையாக இருந்து வந்தார்.அதே சமயத்தில் அந்த நாகராஜனுக்கு பால் வார்த்து வணங்கி,அது உமிழும் முத்து மாணிக்கத்தையும் எடுத்து சேமித்து வந்தார்கள் இருவரும்.
இந்த சமயத்தில் இறைப்பணியாற்றுவதற்காக சுவாமிகள் காசி யாத்திரை சென்றுவிடுகிறார்.அந்த சமயத்தில் இறைப்பணியை கவனிப்பதற்காக அவனுடைய மகன் நியமிக்கப்படுகிறான்..அவன் நாகராஜனுக்கு பால் வார்ப்பதனையும்,முத்துகளை சேமிப்பதனையும் இதனை வேறு யார்க்கும் சொல்ல கூடாது என்பதனையும் நன்கு அறிவான்.
அவன் வேறு மாற்றான் குலத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான்.ஒரு சமயத்தில் அனைத்து உண்மைகளையும் அவளிடத்தில் கூறுகிறான்.மாணிக்கத்துக்கு ஆசை கொண்ட அவள்,அவனுக்கு ஒரு யோசனை கூறுகிறாள்..
ஒரு நாளைக்கு ஒரு முத்துதான் இடுகிறது.அதனுடைய புற்றை வெட்டிப்பார்த்தாள் எவ்வளவு முத்துக்கள் இருக்கும் அல்லவா! என்று ஆசை வார்த்தை பேசி மயக்குகிறாள்.அவளுடைய ஆசை வார்த்தைகளை நம்பிய அவன்,உண்மையென்று கருதி,புற்றை மறு நாள் தோண்டலாம் என்று தீர்மானிக்கிறான்.மறுநாள் இருவரும் ஆயத்தமாகி வருகிறார்கள்.அப்பொழுது வேறு குலப்பெண் கோவிலினுள் அடியெடுத்து வைப்பது மீறி,அவள் காலடி எடுத்து வைக்கிறாள்..அவன் மண்வெட்டியினால் புற்றினை வெட்டுகிறான்.அவனுடைய ஒவ்வொரு வெட்டினையும் பொறுத்துக்கொண்டு நாகராஜன் பூமியினுள் உள்ளே செல்கிறான்.ஆனாலும் அவளுடைய உந்துதளின் காரணமாக அவன் சற்று வேகமாக தோண்ட ஆரம்பிக்கிறான்.ஒரு சமயத்தில் மண்வெட்டி நாகராஜன் தலையில் பட நேரிடுகிறது,ரத்தம் பீறிட்டு அவன் முகத்தில் அடித்த மாத்திரத்தில்,நாகராஜன் விண் முட்டும் உயரத்திற்கு எழுகிறான்.இதை கண்ட மாத்திரத்தில் அவன் அலரி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறான் ஆனாலும் நாகராஜன் பின் தொடர்ந்தான்,முடிவில் அவன் மீனாட்சிபுரம் கண்மாயின் அருகே சென்ற பொழுது அரவம் தீண்டி மாண்டுபோகிறான்.இந்த நிலையில் அவ்வழியின் வழியே வந்த சுவாமிகள் மக்கள் கூட்டத்தை கண்டு,விசாரிக்கிறார்.மகன் என்பதனை அறிந்து காசியிலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை அவன் முகத்தில் தெளித்து நடந்த அனைத்தயும் கேட்டு அறிகிறார்.அவன் த்ன்னை காப்பற்றுமாறு கெஞ்சியும்,அவனை அங்கேயே சாந்த நிலையடயச் செய்கிறார்..முடிவில் அவர் கோவில் வாசலை சென்றடைகிறார்…கோவிலுக்குள் சென்றால் தீட்டு என்பதனால்..கோவிலின் வெளியிலேயே ஜீவ சமாதியடைகிறார்.அவரது மனைவியும் கோவிலின் ஓரத்திலேயே ஜீவ சமாதியை எட்டினார் என்பதுதான்.இத்தலத்தின் வரலாறு ஆகும்.இன்றளவும் அங்குள்ள கிணற்றில் நாகராஜனுக்கு பால் வார்க்கப்படுகிறது.எங்களது குடும்பமும் இந்த நாகராஜனையும்,ஆதிமூர்த்தி சுவாமிகளையும் தெய்வமாக வைத்து வணங்கி வருகிறது…இந்த கோவிலுக்கு நிறைய தலக்கட்டுக்கள் உள்ளது.சுவாமிகளிலும் பல பிரிவுகள் வைத்து வணங்குகின்றனர்.